Social

header ads
header ads

திரைப்படத்தின் தோற்றம் | The origin of the movie

சலனப்படக் கேமரா எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கண்ணுக்கும் கேமராவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன, மனிதக் கண்ணின் தனித்த குணங்கள் எவை என்ற உண்மையை முதலில் தெளிவாக விளக்கி, உலகில் திரைப்படத்தை உருவாக்க முனைந்த முன்னோடிகளின் முயற்சி, உலகின் முதல் திரைப்படம். பேச்சும் இசையுமற்ற மௌனப் படங்கள் மட்டுமே நிலைத்திருந்த காலம் முதலிய உலகத் திரைப்படத் தொடக்க கால நிலையை இப்பகுதி விளக்கி உரைக்கிறது.

கண்ணும் கேமராவும்

தம் கண்ணைப் பற்றிய அடிப்படைச் செய்திகளை நீங்கள் பள்ளி அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள் கண்ணின் கருப்பு வட்டத்தின் மையத்திலுள்ள புள்ளியைக் கண்மணி என்று கூறுவர். அதன் நடுவே ஒரு நுண்ணிய துளை உண்டு அது வெளிச்சம் மிகும்போது சுருங்கியும் குறையும்போது விரிந்தும் வெளிச்ச அளவுக்கு எற்ப இயங்கும் தன்மையுடையது.

ஆங்கில மொழியில் அதனை 'ஐரிஸ்' (Iris) என்பர் அதன் பின்னே கருவிழியின் உட்பகுதியில் விழி லென்ஸ் அமைந்துள்ளது அதுதான் நாம் காணும் காட்சியைச் சரியான வடிவம், வண்ணம் என்ற அளவில் வாங்கி, அதன் பின்னே அமைத்துள்ள விழித் திரையில் பதிவு செய்யும் விழித்திரையோடு ஒட்டியமைத்த பார்வை நாம்புகள் மூளையில் காட்சியின் அளவு, அசைவு முதலிய நன்மையை உணர்த்துகின்றன. நம் கண்ணின் இப்பகுதிகளைப் பார்த்து வடிவமைத்தது தான் ஒளிப்படக் கேமரா ஆகும்.

விழி லென்ஸ் போலவே கேமராவிலும் லென்ஸ் உண்டு லென்ஸின் பின்னே ஒளித்துளை உண்டு, அந்த ஒளித்துளையை ஒளியின் அளவுக்கு ஏற்பச் சுருக்கவும் விரிக்கவும் செய்ய முடியும். கேமராவின் ஒளித்துளையை 'ஐரிஸ்' என்று அழைப்பதோடு அதற்கு அப்பொச்சர்' (Aperture), 'டயஃபிராகம்' (Diaphragm) என்று வேறு பெயர்களும் உண்டு.

எதிரேயுள்ள நபர் அல்லது பொருள்களின்மீது படும் ஒளியால், அந்த நபரையோ அல்லது பொருளையோ லென்ஸ், ஒளித்துளை வழியாக ஃபோகஸ் செய்து, பிம்பத்தை உள்ளேயுள்ள பிலிமில் குவிக்கும். அப்போது 'கிளிக்' பட்டனை அழுத்தும்போது, ஒளித்துளையை மூடியிருக்கும் ஷட்டர்திறக்க, பிம்பம், ஒளித்துளை வழியாக உட்சென்று பிலிமில் பதியும்.

கண்ணைப் போன்றதுதான் கேமரா என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் ஒளிப்படக் கேமராலினும் திரைப்படக் கேமரா ஒரேயொரு வகையில் வேறானது. அது என்னவெனில், ஒளிப்படக் கேமராவில் 'கிளிக்' பட்டனை அழுத்தும்போது ஒரேயொரு படம் மட்டுமே பதியும். 

ஆனால், திரைப்படக் கேமராவில் பட்டனை அழுத்தியதும், எதிரே நிகழும் அசைவுகளைத் தொடர்ந்து ஒரு வினாடிக்கு 24படங்கள் வீதம், நாம் அதை நிறுத்தும் வரை தொடர்ச்சியாக எண்ணற்ற படங்களை எடுத்துக் கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றாற்போல, உள்ளே 1000அடி நீளமுள்ள பிலிம் சுருள் பொருத்தப் பட்டிருக்கும், பிலிம் சுருள்தீர்ந்து போனால், புதிய 1000 அடி பிலிம் சுருளை மாட்டிக் கொள்வர்.

சலனப்படக் கேமராவை அறிஞர்கள் உருவாக்க நினைத்தபோது, மனிதர்களின் கண்ணுக்குரிய சிறப்பான ஒரு குணம் மிகவும் உதவியாக இருந்தது. அதுதான் பார்வையின் நிலைத்த தன்னம்' என்பதாகும். இது பற்றி விளக்கமாக இனிக் காண்போம்.

பார்வையின் நிலைத்த தன்மை

மீன்களுக்கு இமைகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? மீனின் கண்களைப் போல் நமக்கும் இமைகள் இல்லாதிருந்தால் நாம் திரைப்படம் பார்த்திருக்க முடியாது. நமது கண் இமைக்கும் பழக்கத்தால் 'பார்வையின் நிலைத்த தன்மை' (Persistence of Vision) என்ற குணம் நமது கண்களுக்கே உரிய தனிச் சிறப்பாக உருவானது.

மனிதர்கள் கண்ணைப் பாதுகாக்கும் கருத்தில், அடிக்கடி இமைத்து இமைத்துப் பழக்கமானதால், இந்தப் பார்வையின் நிலைத்த தன்மை என்ற குணம் இயற்கையாக உருவானது. பார்வையின் நிலைத்த தன்மை என்றால் என்ன? இதைப் புரிந்து கொள்வதற்கு இங்கே உங்கள் முன் எளிமையான சில கேள்விகளை முன்வைப்போம்.

கண்ணை இமைப்பது என்றால் என்ன? கண்ணை மூடித் திறப்பது! என்ன, சரியா? சரி கண்ணை மூடினால், காட்சி மறைந்துவிடும்! சரிதானே? ஒரு நாளைக்கு எத்தனை முறை நாம் இமைக்கிறோம்! காட்சி மறைந்து மறைந்தல்லவா தோன்ற வேண்டும்? அப்படி மறைகிறதா? இல்லையே! தொடர்ந்துதானே காட்சிகள் தெரிகின்றன. 

நாம் தூங்கும்போது, அல்லது வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொண்டிருக்கும்போது மட்டும்தாளே காட்சி மறைகிறது. ஆளால், இமைக்கும் போது மறைவதில்லை! இமைப்பது என்பதும் கண்ணை மூடுவதுதானே? அப்போது மட்டும் காட்சி மறையவில்லையே என்? இந்தக் கேள்வி சிந்திக்கத்தக்கது. சிந்தித்துப் பாருங்கள்.

நம் முன்னோர்கள் இப்படிச் சிந்தித்ததன் விளைவாகக் கண்டறிந்த உண்மைதான் நம் கண்ணின் குணமான பார்வையின் நிலைத்த தன்மை. அதாவது, ஒரு குறிப்பிட்ட மிகச்சிறிதளவு நேரம் நமது கண் மூடி, உடனே திறந்துவிட்டால், கண்ணை மூடுவதற்குமுன் நாம் பார்த்த காட்சியை (இமைக்கும்-அதாவது, கண்ணை மூடும் அந்தக்கண நேரம்) தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போலவே, அக்காட்சியை நிலைத்து நிறுத்தும் பண்பு நம் கண்ணுக்கு உண்டு. அதனால்தான் கண்ணை இமைக்கும்போது காட்சி மறையாமல் தொடர்ந்து பார்ப்பது போன்றே ஒரு பிரமையைத் தருகிறது.

இமைக்கும்போது உண்மையில் காட்சி மறைந்துதான் போகும். அது மறைந்தாலும் கண்ணின் பார்வையின் நிலைத்த தன்மை என்ற குணத்தினால், நமக்குக் காட்சி தொடர்ந்து தெரிகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அறையில் சுழலும் மின்விசிறிக்கு மூன்று இறக்கைகள் தானே? அதனைச் சுழல விடுங்கள். பல இறக்கைகள் தெரிகின்றனவா? இது பார்வையின் நிலைத்த தன்மையால், ஆங்காங்கே பல இறக்கைகள் நிலைத்து நிற்பதான ஒரு மாயத் தோற்றத்தால் உருவானது ஆகும். உங்கள் சைக்கிள் சக்கரத்தில் ஒரு போக்கஸ் கம்பியில் சிவப்பான ஒரு வட்ட வில்லையை மாட்டி, சக்கரத்தை வேகமாகச் சுழற்றுங்கள், இப்போது சிவப்பான ஒரு வட்டம் தெரியும் இதுவும் பார்வையின் நிலைத்த தன்மையால் உருவான மாயத் தோற்றம் இருட்டில் ஊதுபத்தியைக் கையில் பிடித்து நிற்பவரைப் பாருங்கள். ஒரு ஒளி மட்டுப் புள்ளியாகத் தெரியும். அதையே அவர் வட்டமாகச் சுழற்றும்போது, ஒரு ஒளிவட்டம் தோன்றும். இதுவும் பார்வையின் நிலைத்த தன்மையால் உருவான தோற்றம் ஆகும்.

கண் இமைக்கும் நேர அளவு எவ்வளவு?

நாம் விழியை இமைக்கும்போது (கணநேரம் மூடித்திறக்கும்போது) காட்சி மறையாமல் இருப்பதற்கு, பார்வையின் நிலைத்த தன்மையே காரணம் என்று கூறினோம் இமைப்பதையே கொஞ்சம் காலம் நீட்டித்தால், காட்சி மறைந்து விடும்.

அவ்வாறெனில், இமைக்கும் நேர அளவு (இன்றைய கால அளவு அலகில்) எவ்வளவு நேரம்? ஒரு வினாடியா? இல்லை. ஒரு வினாடி நேரம் கண்ணை மூடினால் காட்சி மறைந்து விடும். பிறகு, அரை வினாடியா? கால் வினாடியா? அதுவும் இல்லை. அரைக்கால் வினாடிக்கும் பாதி நேரம் ஆகும். அதாவது, 1/16 வினாடி நேரம். 1/16 வினாடி நேரத்திற்குள் கண்ணை மூடித் திறந்தால் மட்டுமே காட்சி மறையாது. இந்த உண்மையை 200 ஆண்டுகளுக்கு முன்னர் நம் விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறினார்கள். 

இந்த அடிப்படையில், தொடர்படக் கேமராவைக் கண்டுபிடிக்க முனைந்தபோது, ஒரு வினாடி நேரத்திற்குள் 16 படங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யும் வேகமுடைய கேமராவைக் கண்டு பிடித்தால்தான் இயல்பான அசைவுகளைக் கொண்ட திரைப்படம் பார்க்க முடியும் என்பதை உணர்ந்தார்கள். இந்தக் கணக்கின் அடிப்படையில் திரைப்படக் கேமராவை உருவாக்கும் முயற்சி உலகெங்கும் பல அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.

திரைப்பட முன்னோடிகள்

திரைப்படத்திற்கான கேமராவை வடிவமைக்கும் முயற்சியில் உலக அறிஞர்கள் ஈடுபட்ட காலக்கட்டத்தில் இன்று வழக்கத்திலுள்ள செல்லுலாய்டு பிலிம் கண்டறியப்படவில்லை. இரசாயனப் பூச்சுப் பூசப்பட்ட மெல்லிய தகட்டுச் சுருளினைப் பயன்படுத்தியே படம் பிடிக்க வேண்டிய நிலை இருந்தது. தகட்டுச் சுருளைத் தயாரிப்பதில் சிரமம் இருக்க வில்லை. ஆனால், கேமராவில் அதை அதிவேகமாக இயக்கி ஒரு வினாடிக்கு 16 படங்கள் படம்பிடிக்கும் முறையில்தான் சிக்கல் இருந்தது. இதில் பலரும் முயன்று தோற்றனர்.

இந்தச் சவால்கள் என்னும் அலைகடலில் எதிர்நீச்சல் போட்டுச் சாதித்த அறிஞர்களு குறிப்பிடத்தக்க திரைப்பட முன்னோடிகள் சிலரின் சாதனைகளைக் காண்போம்.

டாக்டர் ஜூல்ஸ் மாரே

1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜூல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு வேட்டைத் துப்பாக்கியை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனப்படக் கேமராவாக உருமாற்றத் திட்ட மிட்டார். அதன் குண்டு செல்லும் குழாய்ப் பகுதியில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள்(தகடு) இயங்கும் ஒளிபுகாத இருட்டறையாக அமைத்தார்.

 படம் பதியும் தகட்டுச் சுருள், பல்சக்கரங்கள் உதவியுடன் ஒரு விளாடியில் பலமுறை நகர்வதற்கான ஒரு பொறியையும் உள்ளே அமைத்தார். அதைத் துப்பாக்கியின் குதிரைப் பகுதியின் விசையில் இணைத்தார். குதிரையை விரலால் இழுத்தால், தகட்டுச் சுருள் அடுத்தடுத்து நகர்த்து, வரிசையாகப் படம் பதியுமாறு உருவாக்கினார்.

இந்தக் கேமராவில் வினாடிக்குப் பதினாறு படங்கள் பிடிக்க முடியவில்லை; வெறும் 12 படங்கள் மட்டும் பதிவாகக் கூடிய வேகத்திலேயே அது இருந்தது. எனினும், திரைப்படக் கேமரா கண்டுபிடிப்பில் இது ஒரு மைல்கல் என்று கூறலாம். இதனை வைத்து டாக்டர் மாரே 1889இல் பாரீஸ் நகர விழாவில் மக்களைத் தம் துப்பாக்கிக் கேமராவால் படம்பிடித்து, அந்தப் படத்தை மக்கள் முன் போட்டுக் காட்டினார். 

அது இயல்பான சலனமாக இருக்கவில்லை. தரம் குறைந்த படப்பிடிப்பு என்றாலும் அதுதான் உலகின் முதல் படப்பிடிப்பு என்று கூறலாம். 'ஷூட்டிங்' (Shooting) எனப்படும் வேட்டைக்குப் பயன்படுத்தும் துப்பாக்கியைக் கேமராவாக உருவாக்கிப் படம்பிடிக்கத் தொடங்கிய அந்த நிகழ்வை நினைவுகூர்வதாகத்தான் இன்றும் திரைப்படப் படப்பிடிப்பை ஷூட்டிங்' என்றே அழைத்துவருகிறார்கள்.

டாக்டர் ஜூல்ஸ் மாரேயின் உதவியாளராக இருந்த ஜர்ஜஸ் டெமனி என்பவர், அந்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவில் பல முன்னேற்றங்களைச் செய்து வடிவமைத்தார். அப்படியும் வினாடிக்கு 12 படங்கள் எடுக்கமுடியவில்லை. அவர் அதனை காமண்ட் என்பவரிடம் 1893இல் ஒப்படைத்தார் என்பர்.

தாமஸ் ஆல்வா எடிசன்:

இதே காலத்தில் அமெரிக்க நியூயார்க் நகரில் ஒளிவிளக்கு. ஒளிப்படம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்தம் உதவியாளரான கே.எல். டிக்ஸனுடன் சேர்ந்து சலனப்படக் கேமராவைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றார். எனினும் எடிசனும் டிக்ஸனும் எடுத்த முயற்சிகளில் தோல்வியையே சந்தித்தனர் 1பேடங்களைப் பதியும் கேமரா அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

கேமரா உரிமை பதிவு:

இந்தக் காலகட்டத்தில்தான், அதாவது 1888-1889 ஆண்டுகளில், ஜார்ஜ் ஈஸ்ட்மென்னும் டாக்டர் ஹன்னி பால்குட்வின் என்பவரும் சேர்ந்து செல்லுலாய்டு பிலிம் சுருளைக் கண்டுபிடித்து விற்பனைக்கு விட்டனர். அந்தப் படச்சுருள் அண்மைக் காலத்தில் நாம் பயன்படுத்தியது மாதிரி இல்லை ஃபிலிமின் அகலம் நமது சுட்டு விரல் நீளத்திற்கு இருந்தது எடிசன் அந்த செல்லுலாய்டு படச்சுருள்களை வாங்கி ஆராய்ந்தார்.

 அதில் படங்களைப் பதிவு செய்வது எளிமையாகவும் துல்லியமாகவும் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தார். அந்தப் படச்சுருளுக்கு ஏற்பக் கேமராவைத் திருத்தி வடிவமைத்தார். 16 படம் பிடிக்கும் கேமரா தயார் 1891ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் நாள் அந்தக் கேமராவின் உரிமைக்கு எடிசன் விண்ணப்பித்து, 31-08-1891இல் அவர் பெயரில் கேமரா உரிமை பதிவானது.

'கினிட்டோஸ்கோப்'

தாமஸ் ஆல்வா எடிசன் தம் கேமராவில் பெண்களின் நடனத்தைப் பதிவு செய்தார். ஒரு சர்க்கஸ் கம்பெனியின் அனுமதியோடு, அந்தக் கம்பெனியின் சர்க்கஸ் வித்தைகளைப் படம்பிடித்தார். அன்றைக்குப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரராக இருந்த ஜேம்ஸ் கே. கார்பெட் என்பவரை இன்னொருவரோடு சண்டையிடச்செய்து அந்தக் குத்துச் சண்டைப் பந்தயத்தையும் படம்பிடித்தார்.

 இவ்வாறு மக்கள் விரும்பிப் பார்க்கும் சுவையான நகர்வுக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டார். ஆனால், அந்தப் படங்களைப் பொதுமக்கள்முன் திரையில் போட்டுக் காட்டும் புரஜெக்டரை அவரால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெட்டிக்குள் படச்சுருளை ஓடவிட்டு, ஒரு லென்ஸ் வழியாக ஒருநேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதற்குக் 'கினிட்டோஸ்கோப்' என்று பெயரிட்டார்.

கினிமா & சினிமா 

'கினிமா' (Kinema) என்ற கிரேக்க மொழிச் சொல்லுக்கு அசைவு, நகர்வு, சலனம் என்பது பொருளாகும். கினிமாதான் ஆங்கிலத்தில் 'சினிமா' ஆனது, தாமஸ் ஆல்வா எடிசன் 'கினிமா' என்ற கிரேக்கச் சொல்லை அடிச்சொல்லாசு வைத்துக் 'கினிட்டாஸ்கோப்' என்று இதற்குப் பெயர் சூட்டினார்.

 திரைப்பட வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்றாலும், திரைப்பட வரலாற்று ஆய்வாளர்கள் இதனை முதல் திரைப்படம் என்று ஏற்க மறுப்பர். பொதுமக்கள் முன் திரையில் படம் காட்டினால் மட்டுமே அது திரைப்படம் ஆகும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திரைப்படத்தைக் கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்விக்குத் தாமஸ் ஆல்வா எடிசன் என்று பதில் உரைக்கின்றனர். அதனைச் சரியான பதிலாக ஏற்க முடியாது.

ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ்

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றி வந்த சி. ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்பவர், சலனப்படத்தின்மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், பெரிதும் முயன்று வினாடிக்குப் பதினாறு படம்பிடிக்கும் கேமராவையும், படங்காட்டும் கருவியான புரஜெக்டரையும் கண்டுபிடித்தார். 

அந்தக் காலகட்டத்தில் உலகில் பல நாடுகளில், செல்லுலாய்டு பிலிமில் படம்பிடித்த ஒளிப்படத்தை 'மாஜிக் லேண்டான்' எனப்படும் விளக்கின் உதவியால் திரையில் அசையாத படங்களைக் காட்டிப் பொழுதுபோக்கி வந்தனர். அதே மாஜிக் லேண்டான் விளக்கைப் பயன்படுத்தி இவர் திரையில் சலனப் படத்தைக் காட்ட முயன்றார்.

இதே சி. ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ்தான் பிற்காலத்தில், அதாவது 1925இல், அமெரிக்காவில் வீடியோவைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவரது கண்டு பிடிப்புகளைக் கண்டு எடிசன் வியந்து, அவர் கண்டுபிடித்த கருவிகளில் இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்து உலகின் முதல் திரைப்படத்தை அரங்கேற்றி விடலாம் என்று முனைந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக முந்திக்கொண்டனர் லூமியர் சகோதரர்கள்!

உலகின் முதல் திரைப்படம்

பிரான்சு நாட்டினரான லூயிஸ் லூமியர், அகஸ்டிலூமியர் (Louis Lurniereand Auguste Lumiere) என்னும் லூமியர் சகோதரர்கள் திரைப்படக் கேமரா மற்றும் புரஜெக்டர் முதலிய கருவிகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வெற்றி பெற்றனர். பாரீஸ் மாநகரில் 1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் நாள், அவர்கள் பிரெஞ்சு தேசத்து மக்கள் முன் திரைப்படம் காட்டினர். 

இந்த நாளே உலகில் முதன்முதலாகத் திரைப்படம் காட்டப்பட்ட நாள் என்று வரலாறு கூறுகிறது. திரைப்படம் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார்? என்ற வினாவுக்கு 'லூமியர் சகோதரர்கள்' (Lurniere Brothers) என்று கூறுவதே சரியான விடை ஆகும். எனினும் லூமியர் சகோதரர்கள் எடுத்த அனைத்துத் திரைப்படங்களையும் ஆவணப்படங்கள் (Documentary film) என்ற வகையில் அடக்கிக் கூறுவதே பொருத்தமாகும்.

Post a Comment

0 Comments